சென்னை: சித்தார்த் நடித்துள்ள டக்கர் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனிடையே அதிதி ராவ் உடனான காதல் குறித்தும் சித்தார்த் சமீபத்த்தில் மனம் திறந்தார்.
இந்நிலையில், சித்தார்த்தின் வாய் கொழுப்பால் கோலிவுட் பிரபலம் பிச்சைக்காரன் ஆனது குறித்து தெரியவந்துள்ளது.
சித்தார்த்தால் பிச்சைக்காரனான பிரபலம்
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த சித்தார்த், பாய்ஸ் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஷங்கர் இயக்கத்தில் ஹீரோவான சித்தார்த் தமிழில் ஆயுத எழுத்து, இந்தியில் ரங் தே பசந்தி என அடுத்தடுத்து வேற லெவலில் மாஸ் காட்டினார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது தான் சித்தார்த்தின் வழக்கம்.
அதேநேரம் தெலுங்கில் சித்தார்த்தின் படங்களுக்கு ரொம்ப பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனாலும் தமிழில் ஒரு கட்டத்திற்கு மேல் சித்தார்த்தால் சூப்பர் ஹிட் ஹீரோவாக வலம் வர முடியவில்லை. இருப்பினும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், டக்கர் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்துள்ளார் சித்தார்த்.
அதில் தான் நடித்த படங்கள் குறித்தும் அதில் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் பேசியிருந்தார். அப்போது அவருக்கும் விஜய்க்கும் இடையேயான நட்பை பற்றியும் பேசினார். மேலும் அவர் மிஸ் பண்ண நல்ல படங்கள் குறித்தும் மனம் திறந்தார். அதில் மிக முக்கியமான படம் என்றால் அது ‘பிச்சைக்காரன்’ தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தை சசி இயக்கியிருந்தார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையை முதலில் சித்தார்த்திடம் தான் கூறினாராம் இயக்குநர் சசி. ஆனால், கதை புரியவில்லை என இயக்குநர் சசியை திருப்பி அனுப்பிவிட்டாராம். இதுகுறித்து தற்போது யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இயக்குநர் சசியை வைத்துக்கொண்டே இந்த உண்மையை கூறியுள்ளார் சித்தார்த்.
பிச்சைக்காரன் படத்தின் கருவை மட்டுமே சொன்னதால் தனக்கு கதை புரியவில்லை என சித்தார்த் கூறியுள்ளார். தன்னிடம் ஒருவிதமாக சொலில்விட்டு பிச்சைக்காரன் படத்தை அப்படியே வேற லெவலில் எடுத்துவிட்டார் என இயக்குநர் சசியை கலாய்த்துள்ளார். அதன்பின்னரே விஜய் ஆண்டனியிடம் சென்றுள்ளார் சசி. இறுதியாக இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு தரமான கம்பேக்காக அமைந்தது.
இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், சித்தார்த்துக்கு வாய் கொழுப்பு மட்டும் தான் உள்ளது. படத்தின் கதையை ஒழுங்காக கேட்டு பிச்சைக்காரன் படத்தில் நடித்திருந்தால் இன்று அவரது மார்க்கெட் சூப்பராக இருந்திருக்கும் எனக் கூறி வருகின்றனர். அந்த அதிர்ஷ்டம் விஜய் ஆண்டனிக்குச் செல்ல, அவர் பிச்சைக்காரன் 2ம் பாகமும் எடுத்து மிரட்டிவிட்டார் என பாராட்டி வருகின்றனர்.