சென்னை: நடிகர் விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி தெலுங்கில் பிரபாஸ், பவன் கல்யாண் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
40 வயதை நெருங்கி விட்ட நிலையிலும், ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது கட்டுடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.
திமிரு படத்தில் வில்லியாக எப்படி மிரட்டினாரோ அதே போலத்தான் இன்னமும் செம போல்டாக இருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.
விஷால் அண்ணி: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதன் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஷாலின் அண்ணனான தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவை 2008ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நடிகை ஸ்ரேயா ரெட்டி குடும்ப வாழ்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் செம பிசியாக ஈடுபட்டு வருகிறார். இந்த தம்பதியினருக்கு அமலியா எனும் மகள் உள்ளார்.
திமிரு பட வில்லி: டேய் பாண்டி என சேலைய வரிந்துக் கட்டிக் கொண்டு விஷாலின் திமிரு படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்து அசத்திய ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் அண்டாவ காணோம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடித்த சுழல் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து மிரட்டி இருப்பார்.
தமிழ் சினிமாவை விட தெலுங்கில் பிரபாஸ், பவன் கல்யாண் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பிரபாஸின் சலார் படத்தில்: கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன் படமான சலார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.
மேலும், பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடிப்பில் விரைவில் உருவாக உள்ள ஓஜி படத்திலும் இணைந்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
வெறித்தனமான வொர்க்கவுட்: 39 வயதை கடந்த நிலையில், இன்னமும் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து தனது உடலை செம ஃபிட்டாக வைத்திருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
தெலுங்கில் நடிப்பது போலவே ஸ்ரேயா ரெட்டி தமிழ் சினிமாவிலும் வில்லியாகவோ கேரக்டர் ரோலிலோ நடித்து மிரட்டினால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.