இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு.
இப்படமும் தோல்வியை சந்தித்ததால் அடுத்ததாக ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் வெங்கட் பிரபு இருக்கின்றார். இந்த சூழலில் அவருக்கு விஜய்யை இயக்கும்
மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
Leo: லியோ படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்த தளபதி..இதுதான் காரணமாம்..!
லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்னதான் தொடர்ந்து வெங்கட் பிரபு இரு தோல்விப்படங்களை கொடுத்தாலும் அவரின் மீது நம்பிக்கை வைத்து விஜய் தளபதி 68 படத்தை ஒப்படைத்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் ஐடியா
இதையடுத்து தற்போது தளபதி 68 படத்தின் முழு கதையையும் உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் வெங்கட் பிரபு. அஜித்திற்கு ஒரு மங்காத்தா, சிம்புவிற்கு ஒரு மாநாடு போன்ற மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் அது போல ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தளபதி 68 படத்தின் பூஜை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தளபதி 68 படத்தின் டைட்டில் அல்லது போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட வெங்கட் பிரபு விரும்பியுள்ளார். ஆனால் தற்போது விஜய் லியோ படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருவதாலும், தளபதி 68 அப்டேட் வந்தால் ரசிகர்களின் கவனம் சிதறும் என்பதாலும் லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 அறிவிப்பை வெளியிடவேண்டாம் என கூறிவிட்டாராம்
நிராகரித்த தளபதி
இதனை ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபுவிற்கு விஜய்யின் பிறந்தநாளில் ஏதேனும் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக ஒரு வீடியோ வெளியிட திட்டமிட்டாராம். இந்த ஐடியாவை விஜய்யிடம் கூறியபோது இதெல்லாம் வேண்டாம் என விஜய் கூறிவிட்டாராம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
லியோ படம் வெளியாகும் வரை ரசிகர்களின் கவனம் தளபதி 68 படத்தின் மீது சிதறக்கூடாது. அது லியோ படத்தின் வசூலை பாதிக்கும் என்பதற்காக விஜய் இவ்வாறு கூறியுள்ளாராம். இதனை புரிந்துகொண்ட வெங்கட் பிரபு சைலண்டாக தளபதி 68 முழு கதையை உருவாகும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.