Vidaamuyarchi: வேகமெடுக்கும் அஜித்தின் 'விடாமுயற்சி': லைகாவின் வேறலெவல் திட்டம்.!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் அறிவிப்போடு நிற்கிறது. இதனால் ரசிகர்கள் கடுமையான அப்செட்டில் உள்ளனர். இந்தப்படத்தின் அறிவிப்பே ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின்னரே வெளியானது. டைட்டிலுடன் அறிவிப்பு வெளியானதால் விரைவில் படப்பிடிப்பு துவங்கிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் தலைப்புடன் எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அஜித்தின் 62 வது படத்தை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் ஆர்வம் காட்டினாலும் மகிழ் திருமேனியே அந்த வாய்ப்பை கைப்பற்றினார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனிடையில் அண்மையில் லைகா நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரைடு நடத்தியது. இதனால் ‘விடாமுயற்சி’ படம் மேலும் தள்ளிப்போனது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இந்தப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வலைப்பேச்சு வீடியோவில் பேசியுள்ள அந்தணன், ‘விடாமுயற்சி’ படத்தை கைவிடக்கூடாது என்பதில் லைகா நிறுவனம் உறுதியாகவுள்ளதாம். இதற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியன் உதவியுடன் இந்தப்படத்தை துவங்க லைகா நிறுவனம் பிளான் போட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தற்போது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பிற்கான லொகேஷன்களை தேர்தெடுக்கும் வேளையில் மகிழ் திருமேனி இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாதமே இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘துணிவு’ படத்தினை தொடர்ந்து இந்தப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். கடந்த ஜனவரியில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Mrunal Thakur: விஜய்க்கு ஜோடியாகும் ‘சீதா ராமம்’ மிருணாள் தாகூர்: அடுத்த ஹிட் பார்சல்.!

‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பாகவே அஜித்தின் 62 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென விக்கி இந்தப்படத்திலிருந்து விலகினார். அவரின் கதை தயாரிப்பு தரப்பிற்கு திருப்தியளிகாததால், விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. இதனையடுத்து தான் மகிழ் திருமேனி இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பினை கைப்பற்றினார்.

இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ‘விடாமுயற்சி’ என்ற டைட்டிலுடன் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம். தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய மகிழ் திருமேனியுடன் அஜித் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush: எனக்கும் ஆசைதான், ஆனா.. ‘D50’ படம் குறித்து உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.