இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பை இன்னும் சில தினங்களில் முடித்துவிட்டு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவங்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.
மேலும் விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அந்நாளில் லியோ படத்திலிருந்து வெறித்தனமான அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அநேகமாக லியோவின் கிலிம்ஸ் வீடியோ விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறுதிக்கட்டத்தில் லியோ
இப்படத்தை முடித்த கையோடு விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். AGS தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷாநகர் ராஜா இசையமைக்கிறார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Leo: லியோ படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்த தளபதி..இதுதான் காரணமாம்..!
வெங்கட் பிரபு மற்றும் விஜய் தளபதி 68 படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபுவின் டீமில் இருக்கும் ஜெய், அசோக் செல்வன் ஆகியோர் தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தங்களின் விருப்பதை தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யுடன் வருண் சக்கரவர்த்தி
இந்நிலையில் நடிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என அவரின் விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யை பார்த்து லியோ படத்தை பற்றி ஒரு கேள்வியும் கேட்கவேண்டும் என தன் ஆசையை கூறியுள்ளார் வருண் சக்ரவர்த்தி.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணிக்காக ஐ.பி எல் போட்டியில் ஆடி வருகின்றார். மேலும் இந்திய அணிக்காகவும் ஆடியுள்ள வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராவார். விஜய்யின் முகத்தை வருண் சக்கரவர்த்தி தன் உடம்பில் பச்சை குத்தியுள்ளார். அந்த அளவிற்கு விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கும் வருண், விஜய்யை பார்த்தல் லியோ திரைப்படம் LCU வில் உருவாகின்றதா ? இல்லை தனி படமா ? என்ற கேள்வியை கேட்கவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.