சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் […]