தனுஷின் ‘படிக்காதவன்’ உள்ளிட்ட பல படங்களில் சப்போர்டிங் கேரக்டர்களில் நடித்துள்ளவர் பிரபு. இவர் புற்றுநோயால் காலமாகியுள்ளார். அவருக்கு பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இறுதி சடங்கு செய்ய உதவியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் அவரின் தங்கையை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரபு. இந்த படம் மட்டுமில்லாமல் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பிரபு கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த இவருக்கு பிரபல இசையமைப்பாளர் டி. இமான் மருத்துவ உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் பிரபு சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
பேஸ்புக் லைவில் தற்கொலை முயற்சி: பிரபல நடிகரின் செயலால் பரபரப்பு.!
அவரின் இறுதி சடங்கிற்கான முழு உதவிகளையும் டி. இமான் செய்துள்ளார். மேலும், இடுகாடு வரை சென்று அவருக்கான இறுதி சடங்குகளை செய்துள்ளார். மின்சார மயானத்தில் கொள்ளி வைப்பது உட்பட சடங்குகளையும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ, போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து துணை நடிகர் மறைவிற்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் மனிதநேயத்துடன் டி. இமான் செய்துள்ள இந்த காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Leo: ‘லியோ’ படத்தில் எல்.சி.யூ இருக்கா.? இல்லையா.?: ‘கைதி’ பட நடிகரின் வேறலெவல் பதிவு.!