சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்துள்ளனர் இன்று அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்துள்ளனர். அந்த நிர்வாகிகளில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோரும் அடங்குவர். அப்போது அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், சட்டம், ஒழுங்கு சீர் குலைவு போன்ற விவரங்கள் தொடர்பாக மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அமலாக்கத்துறையால் கைது […]