சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். அதாவது, இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். ஆளுநரை சந்தித்து தி.மு.க அரசுக்கு எதிராக மனு அளிக்க இருக்கின்றனர். அதோடு சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்து மனு அளிக்க உள்ளனர்.
