இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக 25 பேர் வாக்குமூலம் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிஜ் பூஷண் மீது சிறுமி ஒருவர் அளித்த பாலியல் புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் மீதான போக்ஸோ வழக்கு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.