சென்னை: புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440 ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை நேற்று (ஜூன் 14) கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை நேற்று இரவு முதல் தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும், துணை ராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
இந்தநிலையில், புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440 ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமான நடைமுறையின் படி விசாரணைக் கைதி எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.