ஜம்மு காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக சந்தேகம் கொண்டனர். அவர்கள் சரமாரியாக சுட்டதும் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர்.
வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காருக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு,தேடும் பணி நடைபெற்று வருகிறது.