தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட 5 பேர் இடமாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட 5 பேர் இடமாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் துணை இயக்குனர்கள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆணை பிறப்பித்துள்ளார். அந்த ஆணையில்,

*தொடக்கக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக இருந்த ரா. பூபதி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.  

*பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் அ.ஞானகௌரி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.  

*தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குநர் பெ.அய்யண்ணன், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநர் அருளரசு, தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.  

*செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த அரசாணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.