சென்னை: தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில், வழக்கமாக நான் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது […]