தமிழ் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டய பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் நடப்பாண்டு கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி மாணவ சேர்க்கை நடைபெற உள்ளது.
எனவே இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.