கர்நாடகாவில், முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவார் தொடர்பான பாடங்களை வரலாற்று பாட புத்தகங்களிலிருந்து அகற்றுவதுடன், பள்ளி பாடத்திட்டத்தில் முந்தைய பாஜக அரசு கொண்டுவந்த அனைத்து மாற்றங்களையும் திரும்பப்பெறவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தினமும் காலை, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் இந்திய அரசியல் சாசன முகவுரையை வாசிப்பதை கட்டாயமாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.