பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 66 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புயலின் உண்மையான பாதிப்பு என்ன என்பது நாளைக்குதான் தெரியும் என்று கூறிய அவர், அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
அனைத்து நிவாரணப்பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார். புயல் காரணமாக பாகிஸ்தானில் புயல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறியரக விமானங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.