சென்னை: ருமேடிக் எனப்படும் அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 25 வயது இளம்பெண் ஒருவர் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவரது உயிரை காப்பற்ற தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என அவர் வேண்டுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ருமேடிக் இதய நோய் உலகம் முழுவதும் சுமார் 2.8 லட்சம் மக்கள் உயிரிழக்க காரணமாக இருக்கிறது. பணக்கார நாடுகளை காட்டிலும், வளர்ந்து வரும், வளரும் நாடுகளில் இந்த உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன. பொதுவாக இது 25 வயதிற்குட்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது. இதேபோலதான் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த ஸ்ரீலேகா எனும் 25 வயது இளம் பெண்ணும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீலேகா கஷ்டப்பட்டு முதுகலை வரை படித்து முடித்திருக்கிறார். பிள்ளைகள் படித்த முடித்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்று நம்பிய பெற்றோர் இருந்த கொஞ்ச சொத்துக்களையும் விற்று படிக்க வைத்துள்ளனர். படித்து முடித்த பின்னர்தான் ஸ்ரீலேகாவுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதே தெரிய வந்திருக்கிறது.
இந்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து தப்பிக்க இருந்த ஒரே பாதையும் அடைபட்டு போனது மட்டுமல்லாது, இந்த துயரத்திலிருந்து மீளவே முடியாது என்கிற உண்மை இவர்களின் குடும்பத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாத அவர்கள் எங்கெங்கோ சென்று, யார் யாரிடமோ கேட்டு பணத்தை திரட்டி சென்னை MIOT மருத்துவமனையில் தனது மகளை பெற்றோர் அனுமதித்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலேகாவுக்கு முதற்கட்ட அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.
ஒரேயொரு அறுவை சிகிச்சையால் மட்டும் முடிந்துவிடும் பிரச்னையல்ல இது. எனவே மற்றொரு அறுவை சிகிச்சைக்கு உடினயாக தயாராக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இவர்களிடம் நம்பிக்கையை தவிர எதுவும் கிடையாது. இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3,50,000 வரை செலவாகும். இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஸ்ரீலேகாவும், அவருடைய பெற்றோரும் தனியாக திரட்ட முடியாது. எனவே அவருக்கு துணையாக நாமும் இருப்போம்.
மனிதர்கள் அனைவரும் ஒருவரை ஒருவரை சார்ந்துதான் இயங்குகிறோம். இந்த இயக்க சங்கியிலில் ஒரு கண்ணி அறுந்தாலும் கூட அது ஒட்டு மொத்த மனித சமூகத்திற்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாம் நம்மால் முடிந்த உதவியை ஸ்ரீலேகாவுக்கு செய்வோம். உதவி பெரியதா? சிறியதா? என்பது முக்கியமல்ல.. உதவுவதுதான் முக்கியம்.