தமிழ்நாட்டில் அமைந்துள்ள ரெனால்-நிசான் கூட்டு தொழிற்சாலையில் சுமார் 10,00,000 வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக ரெனால்ட் இந்தியா கடந்துள்ளது. 13 ஆம் ஆண்டுகளாக ரெனோ இந்தியாவில் கார்களை தயாரித்து வருகின்றது.
ஆண்டுக்கு 4.80 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ரெனால்ட் தற்போது க்விட், கிகர் மற்றும் ட்ரைபர் என மூன்று மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. மேலும், இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கின்ற மாடல்களை 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ரெனால்ட் இந்த விற்பனை மைல்கல்லை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாளர்கள் இப்போது நிறுத்தப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி ஒன்றாகும்.
Renault India
ரெனால்ட் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மாமில்லபல்லே கூறுகையில், “இந்தியாவில் 10,00,000 வாகனங்களை உற்பத்தி செய்திருப்பது ரெனால்ட் நிறுவனத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
இந்திய சந்தையில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த குறிப்பிடத்தக்க பயணத்திற்கு பங்களித்த எங்கள் வாடிக்கையாளர்கள், டீலர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க முயற்சிப்போம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அற்புதமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.