10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் வருகின்ற 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு அந்ததந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இதில் மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை வருகின்ற 20ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.