ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Sanghavi about abortions: நடிகை சங்கவிக்கு இரண்டு முறை அபார்ஷன் நடந்தது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சங்கவிஅஜித் குமாரின் அமராவதி படம் மூலம் நடிகையானவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கவி. இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார். விஜய், சங்கவி சேர்ந்து நடித்த ரசிகன் படம் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. விஜய்க்கு ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படத்தில் நடித்தார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.சித்தார்த்சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்குழந்தைஐடி துறையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் சங்கவி. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சான்வி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த குழந்தை அப்படியே அம்மா மாதிரியே இருக்கிறது. தன் மகளின் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் சங்கவி. அவர் கணவர், மகளுடன் சந்தோஷமாக இருப்பது தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் சான்வி பிறப்பதற்கு முன்பு சங்கவிக்கு இரண்டு முறை அபார்ஷன் நடந்தது யாருக்கும் தெரியாது.
Kamal Haasan: வில்லனா நடிக்கிறேன், ஆனால் 150 கோடி வேணும்: பிரபாஸின் ப்ராஜெக்ட் கே தயாரிப்பாளரிடம் கேட்ட கமல்?
வேதனைஒரு குழந்தைக்கு தாயாக தான் பட்ட கஷ்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் சங்கவி. அவர் கூறியிருப்பதாவது, நான் முதல் முறையாக கர்ப்பமானபோது 7 வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. 7வது வாரத்தில் என்னை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது என்றார். ஆனால் எட்டாவது வாரத்தில் செக்கப்புக்கு சென்றபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று கூறினார். இதையடுத்து அபார்ஷன் செய்ய வேண்டும் என்றார்.
புலம்பல்நான் செய்த காரியத்தால் தான் இப்படி ஆகிவிட்டதோ என புலம்பினேன். கர்ப்பமாக இருந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அதற்கு சென்றதால் தான் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதோ என நினைத்து கவலைப்பட்டேன். கர்ப்பமாக இருந்தபோது வேலை பார்த்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். அதன் பிறகு மீண்டும் கர்ப்பமானேன் என சங்கவி மேலும் தெரிவித்தார்.
அபார்ஷன்இந்த முறை எந்த வேலைக்கும் போகக் கூடாது என்று வீட்டிலேயே இருந்தேன். முழு ஓய்வில் இருந்தேன். இருந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. அப்படி இருந்தும் இரண்டாவது குழந்தைக்கும் பிரச்சனை ஏற்பட்டு அபார்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டது. இரண்டு முறை அபார்ஷன் நடந்ததும் நொறுங்கிவிட்டேன். என் கணவர் தான் ஆறுதலாக இருந்தார் என்றார் சங்கவி.
Vijay Sethupathi: தளபதி விஜய் அல்ல விஜய் சேதுபதி மகன் தான் ஹீரோவாகிறார்இன்ஸ்டாகிராம்சங்கவியின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றால் ஒரே சந்தோஷமான புகைப்படங்கள், வீடியோக்களாக இருக்கிறது. ஆனால் அவருக்குள் இவ்வளவு வேதனை இருப்பது சங்கவி சொல்லித் தான் தெரிய வந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து யாரும் சந்தோஷமாக இருப்பதாக நினைப்பது தவறு என்கிறார்கள் ரசிகர்கள்.
ரசிகர்கள்ஆண்டவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் சான்வி. அவர் நலமாக இருப்பது போதும். நீங்கள் சான்வியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் குடும்பத்துடன் நலமாக வாழ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள். மகள் பிறந்த பிறகு படங்களில் நடிக்காமல் இருக்கிறார் சங்கவி என்பது குறிப்பிடத்தக்கது.