ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நடிகராகவேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வந்து உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தை துவங்கினார் எஸ்.ஜெ சூர்யா. அதன் பின் வாலி, குஷி என இரு மெகாஹிட் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜெ சூர்யா நியூ என்ற படத்தை தானே இயக்கி நடித்து ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவே தொடர்ந்து நடிகராக நடிக்க துவங்கினார் எஸ்.ஜெ சூர்யா. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படம் எஸ்.ஜெ சூர்யாவிற்கு ஒரு நடிகராக மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.
Thalapathy 68: வெங்கட் பிரபுவின் ஐடியா..வேண்டாம் என்ற தளபதி..காரணம் இதுதானாம்..!
அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெற்றிகரமான நடிகராக வலம் வருகின்றார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் எஸ்.ஜெ சூர்யா. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் எஸ்.ஜெ சூர்யா ராதா மோகனின் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எஸ்.ஜெ சூர்யாவே தயாரித்தும் இருக்கின்றார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இப்படம் நாளை திரையில் வெளியாகவுள்ளது.
பொம்மை படக்குழுவினருடன் நெல்சன்
இந்நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பொம்மை படம் சிறப்பாக இருக்கின்றது. எஸ்.ஜெ சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கரின் நடிப்பு, ராதா மோகனின் இயக்கம், யுவனின் இசை என அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது என அவர் பதிவிட்டுள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் எஸ்.ஜெ சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் கூட்டணியில் மான்ஸ்டர் என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் தான் நெல்சன். இவர் சமீபத்தில் பொம்மை படத்தை பார்த்துவிட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பற்றி பேசிய எஸ்.ஜெ சூர்யா இப்படம் மட்டும் ரசிகர்களிடம் கனக்ட் ஆகிவிட்டால் 96 மற்றும் திருச்சிற்றம்பலம் படத்தை போல மிகப்பெரிய வெற்றியை பொம்மை படம் பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் எஸ்.ஜெ சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.