புதுடில்லி, ஜூன் 15-
வெளிச்சந்தையில், அரிசி மற்றும் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும், தட்டுப்பாடு காலங்களில்தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், அரிசி மற்றும் கோதுமையை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது.
இவை, தனியார் விற்பனையாளர்கள், மொத்தமாக வாங்குவோர் உட்பட, மாநில அரசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான வெளிச்சந்தை விற்பனை திட்ட கொள்கையின் படி, மாநில அரசுகளுக்கு ஒரு குவின்டால் அரிசி 3,400 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், பருவமழை தாமதம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மாநிலங்களுக்கான விற்பனையை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement