புதுடில்லி:’ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம், அதன் புதிய எக்ஸ்ட்ரீம் 160 – ஆர் 4வி., பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், ‘ஸ்டாண்டர்ட், கனெக்டட் மற்றும் ப்ரோ’ ஆகிய மூன்று வகையில் வருகிறது.
சந்தையில் இருக்கும், எக்ஸ்ட்ரீம் 160 – ஆர் 2.வி., பைக்கை ஒப்பிடும் போது, இந்த பைக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, இதன் இன்ஜினில், இரண்டுக்கு பதிலாக நான்கு வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த இன்ஜின் ஆக்ரோஷமாக செயல்பட்டு, அதிக வேகங்களை எளிதாக எட்டுகிறது.
பைக்கின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க, ப்ரோ வகை எக்ஸ்ட்ரீம் பைக்கில் மட்டும், முன்புற அப்சைட் டவுன் போர்க் சஸ்பென்ஷனும், பின்புற 7 – ஸ்டெப் அட்ஜெஸ்டபுள் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இரு நிறங்களில் வரும் இந்த பைக், ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட் போன் எச்சரிக்கை வசதிகள், எல்.சி.டி., டிஸ்ப்ளே, எல்.இ.டி., ஹெட் லைட், புதிய ஸ்விட்ச் கியர், ஸ்பிளிட் மற்றும் சிங்கிள் சீட், 12 லிட்டர் எரிவாயு டாங் என பல அம்சங்களோடு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement