பெங்களூரு:சிம்பிள் எனர்ஜி’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்காக, இரண்டு புதிய மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் வரும் காலாண்டில் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் அண்மையில், ‘சிம்பிள் ஒன்’ என்ற இந்தியாவின் அதிக ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டரை களமிறக்கி இருந்தது. தற்போது தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்களை விரைவில் வினியோகம் செய்ய, அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அறிமுகமாக உள்ள இந்த ஸ்கூட்டர்கள், மின்சார வாகன சந்தையில் மிகக் குறைந்த விலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இணை இல்லாத பாதுகாப்பு, சீறிப்பாயும் வேகம், ஸ்டைலான வடிவமைப்பு, சக்தி வாய்ந்த பேட்டரி மற்றும் பவர் டிரைன் என அனைத்து அம்சங்களையும் வழங்குவதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement