ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Kamal Haasan in Project K: பிரபாஸுக்கு வில்லனாக நடிக்குமாறு கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம் கமல்.
ப்ராஜெக்ட் கேநாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் மெகா பட்ஜெட் படம் ப்ராஜெக்ட் கே. அந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்குமாறு கமல் ஹாசனிடம் கேட்டார்கள். அவர் உடனே பதில் சொல்லவில்லை. இந்நிலையில் வில்லனாகத் தானே நடிக்கணும், நான் நடிக்கிறேன் என நாக் அஸ்வினிடம் கமல் ஹாசன் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சித்தார்த்சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்டேட்ஸ்ப்ராஜெக்ட் கே படத்திற்காக டேட்ஸ் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் கமல் ஹாசன். அதே சமயம் வில்லனாக நடிக்க பெரிய தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார் கமல் என கூறப்படுகிறது. 20 நாட்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் கமல். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் ஹாசன் நடிப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 150 கோடிபிரபாஸுக்கு வில்லனாக நடிக்க கமல் ஹாசன் ரூ. 150 கோடி கேட்டிருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கமல் ஹாசன் படம் ஒன்றுக்கு ரூ. 75 கோடி சம்பளம் வாங்குகிறார் என அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் 20 நாட்கள் நடிக்க கமல் ஹாசன் ரூ. 150 கோடி கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே அவர் கேட்டிருந்தாலும் தப்பில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
தீபிகா படுகோன்ப்ராஜெக்ட் கே படத்தில் பாலிவுட்டை சேர்ந்த தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் கோலிவுட் ஜாம்பவானான கமல் ஹாசனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதனால் ப்ராஜெக்ட் கே மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் ப்ராஜெக்ட் கே படத்தை 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
உலக நாயகன்Vidaa Muyarchi:விடாமுயற்சியில் அவர் மட்டும் அஜித்துக்கு வில்லனாக நடித்தால் அது தான் தரமான சம்பவம்ப்ராஜெக்ட் கே படத்தை ரூ. 500 கோடி செலவில் எடுத்து வருகிறார்கள். படத்தில் கிராஃபிக்ஸ் வேலை அதிகம். கடந்த 5 மாதங்களாக கிராஃபிக்ஸ் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு வரை அது தொடரும் என தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெரிவித்தார். பிரபாஸுக்கு வில்லனாக கமல் ஹாசன் தான் நடிக்க வேண்டும் என அஸ்வினி தத் தான் விரும்பினார் என செய்திகள் வெளியாகின.
இந்தியன் 2கமல் ஹாசனின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விக்ரம். அந்த படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்தியன் 2 படத்தை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் கமல். அந்த படத்தில் விவசாயியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: கமலின் விக்ரமால் ஜெயிலரின் மொத்த பிளானையும் மாற்றிய ரஜினி: இது வேற லெவல்