விஜய் ரசிகர்களின் தற்போதைய மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் ‘லியோ’ படம் எல்சியூவில் வருமா? வராதா? என்பது தான். அதென்னப்பா எல்சியூ என்றால், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ். ‘விக்ரம்’ படத்திலிருந்து தான் இந்த வார்த்தை புழக்கத்திற்கு வந்துள்ளது. லோகேஷ் கடைசியாக இயக்கிய ‘விக்ரம்’ படத்தில் தனது முந்தைய படமான கைதியில் இடம்பெற்ற சில கேரக்டர்களை இந்தப்படத்திலும் இடம்பெற செய்திருப்பார்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதாரணமாக ‘கைதி’ பட ஹீரோவான கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் ‘விக்ரம்’ படத்திலும் ஒரு சீனில் வரும். இதே போல் ஏகப்பட்ட கைதி பட கேரக்டர்கள் ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து தனது அடுத்தடுத்த படங்களிலும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் இடம்பெறும் என தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதனாலே ‘லியோ’ படம் எல்சியூவில் உருவாகிறதா என ரசிகர்களுக்கு படம் ஆரம்பித்ததில் இருந்தே சந்தேகம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அவ்வப்போது ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார். கமல் கதாபாத்திரம் இடம்பெறும் எனவும் செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. ஆனால் இந்த யூகங்கள் எதற்கும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே பதிலளிக்கவில்லை. இதனாலே ‘லியோ’ எல்சியூ பணியில் உருவாகிறதா என்பது தெரியாமல் ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து ‘கைதி’ பட நடிகர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கைதி’ படத்தில் அடைக்கலம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் ஹரிஷ் உத்தமன். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘லியோ யூ ஆர் இன் டேஞ்சர் என ஹரிஷ் கேட்க, ஐயம் நாட் இன் டேஞ்சர். ஐயம் தி டேஞ்சர்’ என விஜய் பதில் சொல்வதை போல் வசனம் இடம்பெற்றுள்ளது.
பேஸ்புக் லைவில் தற்கொலை முயற்சி: பிரபல நடிகரின் செயலால் பரபரப்பு.!
இந்த மீமை பகிர்ந்து இதுபோன்று நடந்தால் நல்லாருக்கும் என பதிவிட்டுள்ளார் ஹரிஷ் உத்தமன். இதனால் இவரும் ‘லியோ’ படத்தில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‘லியோ’ படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘லியோ’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், திரிஷா இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட மிக்கபெரிய நட்சத்திர பட்டாளமே ‘லியோ’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Adipurush: ‘ஆதிபுருஷ்’ படத்துக்கான டிக்கெட் விலை இவ்வளவா..?: அலறும் ரசிகர்கள்.!