இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தற்பொழுது எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கான முயற்சியும் மேற்கொண்டு வருகின்றது. இதற்கான காப்புரிமை கோரிய படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த மாடல் ஆனது டெஸ்லா கார்களை போன்ற வடிவமைப்பை நினைவுப்படுத்துகின்றது. ஓலா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.30 லட்சத்திற்குள் துவங்கலாம்.
Ola Electric Car Design
குறிப்பாக இந்த எலக்ட்ரிக் காரில் 70 முதல் 80Kwh பேட்டரி கொண்டிருக்கும். மேலும், 500 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்சை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது முழுமையான விபரங்கள் பற்றி எந்த ஒரு தகவலும் தற்பொழுது இல்லை இந்த மாடலானது விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
ஹெட்லேம்ப் அசெம்பிளி பம்பருக்கு மேலாக உள்ளது. எல்இடி லைட் பட்டியாக இருக்கும் அதன் மூலம் இணைக்கப்பட்ட இரு முனைகளிலும் நேர்த்தியான, கிடைமட்ட விளக்குகள் உள்ளன. மின்சார ஸ்கூட்டர தொடர்ந்து மின்சார கார் தயாரிப்பில் தீவரமாக செயல்பட்டு வருகின்றது.