சென்னை: தனுஷின் படிக்காதவன் படத்தில் காமெடி காட்சியில் நடித்த துணை நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக தான் தங்கியிருந்த ஜீவோதயா ஆசிரமத்திலேயே காலமானார்.
கடந்த 6 மாத காலமாக துணை நடிகர் பிரபுவின் சிகிச்சைக்கான செலவுகளை கவனித்து வந்த இசையமைப்பாளர் டி. இமான் தான் அவரது இறுதிச்சடங்கையும் நடத்தி வைத்தார்.
இந்நிலையில், பிரபுவை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை, என்னை விட அவரை காப்பாற்ற இவர்கள் தான் போராடினார்கள் என சமூக நல ஆர்வலர்கள் பற்றிய விவரங்களையும் பெருந்தன்மையுடன் கூறியது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
படிக்காதவன் நடிகர் பிரபு மரணம்: சுராஜ் இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான படிக்காதவன் படத்தில் தனுஷ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் தனுஷின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக துணை நடிகர் பிரபு நடித்திருப்பார்.
மாப்பிள்ளை பக்கம் ஃபேனை தனுஷ் திருப்பி வைக்க அவரது டோப்பா பறந்து விடும். இந்த சொட்டைத் தலையனா என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை என தனுஷ் திட்டும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த துணை நடிகர் பிரபு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், காலமானார்.
6 மாத காலம் உதவி செய்த டி. இமான்: தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இசையமைப்பாளர் டி. இமான் யூடியூப் ஒன்றில் படிக்காதவன் படத்தில் துணை நடிகராக நடித்த பிரபு ஆதரவு இல்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் என்பதை அறிந்த உடனே தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் தேவையான உதவிகளையும் சிகிச்சைக்கு தேவையான நிதியையும் வழங்கி வந்துள்ளார்.
ராமசந்திரா மருத்துவமனை, அரசு மருத்துவமனை என வைத்து புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அளித்து வந்தும் எந்தவொரு பலனும் இல்லாமல் புற்றுநோயின் தீவிரம் காரணமாக பிரபு இறந்தது டி. இமானை வெகுவாக பாதித்தது.
இறுதிச்சடங்கு செய்த இமான்: இசையமைப்பாளர் டி. இமான் எவ்வளவு முயற்சித்தும் பிரபுவை காப்பாற்ற முடியவில்லை என்றும் இன்னும் ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் அவரது ஆயுளை நீட்டித்திருக்க முடிந்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன் என உருக்கமாக தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், பிரபுவுக்கு இறுதிச்சடங்கு செய்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியதும் இசையமைப்பாளர் டி. இமான் தான்.
Actor Prabhu (Padikkathavan and Numerous other films) is no more with us. He had suffered from stage 4 cancer.
And Ascended to the other world this morning.Doctors,nurses,social activists tried their level best to retrieve him.But couldn’t.
Rest In peace brother. My heartfelt… pic.twitter.com/2Yu74ZDieN— D.IMMAN (@immancomposer) June 14, 2023
என்னை விட இவங்க தான்: ஆனால், ஒட்டுமொத்த கிரெடிட்டும் தனக்கு மட்டும் சேராது என்றும் என்னை விட பிரபுவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடியது ஜீவோதயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இந்த இருவர் தான் என உமா மற்றும் பழனியப்பன் தான் என அவர்கள் பற்றியும் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
மீடியா வெளிச்சத்திற்கு முன்பாகவே அவரை பற்றி சில மாதங்களுக்கு முன்பாக என் பார்வைக்கு தெரிந்திருந்தால் கூட அவரை ஒருவேளை காப்பாற்றியிருக்க முடியும் என்று கூட கருதினோம். நேத்ரோதயா எனும் இடத்தில் முதலில் வைத்து பார்த்து வந்தேன். அதன் பின்னர் தான் ஜீவோதயாவில் கேன்சர் நோயாளிகளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டு சிகிச்சை வழங்குவது தெரிந்து இங்கே கொண்டு வந்து சேர்த்தேன் என்றார் டி. இமான்.