சென்னை: மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த சிம்பு அடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களிலும் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா குமார் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருந்தார்.
ஆனால், திடீரென கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சிம்புவின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் தான் காரணம் என தெரியவந்துள்ளது.
வில்லன் நடிகரால் சிம்புவுக்கு வந்த வம்பு: மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு தற்போது STR 48 படத்திற்காக ரெடியாகி வருகிறார். ராஜ்கமல் பேனரில் கமல்ஹாசன் தயாரிக்கும் STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இதனால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சிம்பு கமிட்டாகியிருந்த கொரோனா குமார் படத்தின் பஞ்சாயத்து இன்னும் அவரை விட்டபாடில்லை போல. வெந்து தணிந்தது காடு வெளியாகும் முன்பே ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தாராம் சிம்பு. அதில் ஒன்று வெந்து தணிந்தது காடு 2ம் பாகம், இன்னொன்று கொரோனா குமார் என சொல்லப்படுகிறது.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மூலம் பிரபலமான கோகுல், கொரோனா குமார் படத்தை இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகியதால், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார்பில் பஞ்சாயத்து கூட்டவுள்ளதாக தெரிகிறது. அதேநேரம் இந்தப் படத்தில் இருந்து சிம்பு விலக எஸ்ஜே சூர்யா தான் காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு படத்தில் சிம்பு – எஸ்ஜே சூர்யா காம்போ செம்ம மாஸ் காட்டியது. நடிப்பில் இருவரும் போட்டிப் போட்டு அசரடித்தனர். ஏற்கனவே எஸ்ஜே சூர்யா இயக்கவிருந்த ‘ஏசி’ என்ற படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக நட்பில் இருக்கும் சிம்புவும் எஸ்ஜே சூர்யாவும் மாநாடு படத்தில் இணைந்தனர்.
அவர்களது கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதால், கொரோனா குமார் படத்திலும் எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்கலாம் என சிம்பு கூறினாராம். கொரோனா குமார் படத்தில் ஒரு கேரக்டர் எஸ்ஜே சூர்யாவுக்கு பக்காவாக செட்டாகும் என்பதால் சிம்பு இயக்குநர் கோகுலிடம் கூறியுள்ளார். ஆனால், கோகுல் அதனை ஏற்காததால் தான் சிம்பு கொரோனா குமார் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இதுதான் உண்மையான காரணம் இல்லையென்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.