ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் சிவகார்த்திகேயன். அதன் பின் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேண்டும் என போராடிய சிவகார்த்திகேயனுக்கு தோல்வியே அமைந்தது. இருந்தாலும் தொடர்ந்து போராடி வந்த சிவகார்த்திகேயனுக்கு அது இது எது என்ற ஷோவை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு அவரின் நிலையும்உயர்ந்தது. அந்த ஷோவின் மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அதுபோல தான் விமல் நடிப்பில் வெளியான வாகை சுட வா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார் சிவகார்த்திகேயன். அந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாண்டிராஜிற்கு சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய விதம் பிடித்து போகவே அவரை மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.
சிவகார்த்திகேயனின் புது தொழில்
அதிலிருந்து சிவகார்த்திகேயன் தன் வாழ்க்கையில் திரும்பிப்பார்க்கவே இல்லை. படத்திற்கு படம் அசுர வளர்ச்சி கண்ட சிவகார்த்திகேயன் இன்று தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என ஆல்ரவுண்டராக கலக்கி வருகின்றார் சிவகார்த்திகேயன்.
Thalapathy 68: வெங்கட் பிரபுவின் ஐடியா..வேண்டாம் என்ற தளபதி..காரணம் இதுதானாம்..!
தான் மட்டும் உயராமல் தன் நண்பர்களும் உயர வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கி அவர்களுக்காக படங்களையும் தயாரித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் சினிமாவை சார்ந்த ஒரு தொழிலையும் துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது சென்னையில் சிவகார்த்திகேயன் திரையரங்கங்கள் துவங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சிவகார்த்திகேயன் ASK ( ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் ) என்ற திரையரங்கை சென்னையில் துவங்க இருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது செம வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.
ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ்
மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிகின்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக முன்னேறி பின்பு தயாரிப்பாளராக உருவெடுத்து தற்போது புது தொழிலையும் துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இவரின் இந்த வளர்ச்சியை பார்த்து இவரது ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்