சென்னை: இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் இயக்கியும் வருகிறார்.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் காபி வித் காதல் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து அவரது இயக்கத்தில் அடுத்ததாக அரண்மனை 4 ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அவரது தலைநகரம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சியின் தலைநகரம் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: இயக்குநர் சுந்தர் சி சிறப்பான பல படங்களை இயக்கியுள்ளார். அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்து வெளியான படம் தலைநகரம். இந்தப் படத்தில் அவருடன் ஜோதிமயி மற்றும் வடிவேலு நடித்திருந்தனர். படத்தில் வடிவேலு காமெடி கலாட்டா செய்திருந்தார். இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த நாய் சேகர் கேரக்டர் அவரது காமெடியில் எவர்கிரீன் ரகம். இந்த காமெடி தற்போதுவரை ரசிகர்களின் பேவரிட்டாகவும் அமைந்துள்ளது.
இதே கேரக்டர் பெயரில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின்மூலம் வடிவேலு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப்படம் கடந்த 2006ம் ஆண்டில் ரிலீசானது. படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 17 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சமீபத்தில் நடத்தப்பட்டது. படத்தின் ட்ரெயிலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் அதிரடியாக இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் வரும் ஜூன் 23ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கியுள்ள VZ துரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் சுந்தர் சியுடன் பாலக் லால்வானி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஷ், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இருட்டு படத்தையும் துரை இயக்கியிருந்த நிலையில், இருட்டு படம்தான் தலைநகரம் 2 உருவாக காரணம் என்று முன்னதாக பேட்டியொன்றில் பேசிய சுந்தர் சி தெரிவித்திருந்தார். இருட்டு படம் த்ரில்லர் ஜானரில் வெளியான நிலையில் தற்போது தலைநகரம் 2 ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
இந்நிலையில் படம் ஜூன் 23ம் தேதி ரிலீசாகவுள்ளதாக போஸ்டராக அறிவிக்கப்பட்டுள்ளது. ரைட் ஈஸ் பேக் என்ற கேப்ஷனுடன் இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. தலைநகரம் 2 படம், சுந்தர் சிக்கு சிறப்பாக கைக்கொடுத்த படம். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், 17 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகவுள்ள தலைநகரம் 2 படம் ரசிகர்களை அதேபோல கவரும் என்று எதிர்பார்க்கலாம்.