ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி காரின் வெளிப்புற தோற்ற படங்கள் வெளியான நிலையில் இன்டிரியர் படங்கள் கசிந்துள்ளது. குறிப்பாக விற்பனையில் கிடைக்கின்ற கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா செடான் காரில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது.
டாடா பஞ்ச், ரெனோ கிகர், மேக்னைட் உள்ளிட்ட கார்களை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்டர் காரின் விலை ரூ.6.50 லட்சத்தல் துவங்கலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. 6 ஏர்பேக்குகள், டேஸ்கேம், சன் ரூஃப் உள்ளிட்ட பலவசதிகளை பெற உள்ளது.
Hyundai Exter Interior
எக்ஸ்டர் எஸ்யூவி விற்பனையில் கிடைக்கின்ற கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா காரில் உள்ளதை போன்ற ப்ரீ-ஸ்டாண்டிங் பைனாக்கிள் கொண்ட டேஷ்போர்டில் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு கருப்பு நிறத்தில் டேஸ்போர்டு உள்ளது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பாடுகள் பெற்றுள்ளது. உயர் வேரியண்டுகளில் லெதர் சுற்றப்பட்டிருக்கும்.
டிஜிட்டல் முறையிலான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது. உயர் வேரியண்டில் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, சன்ரூஃப் மற்றும் வாய்ஸ் கட்டளைகள் மற்றும் பிற அம்சங்களுடன் கிடைக்கும்.
இந்த காரில் 83 hp குதிரைத்திறன் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 69 hp பவர் மற்றும் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கும்.
தற்பொழுது எக்ஸ்டர் காருக்கான முன்பதிவு ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.