ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தளபதி விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகின்றார். அவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானால் அது உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றது. அந்த அளவிற்கு உச்சநட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் தான் இப்படத்தில் மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் இணைந்து 2000 நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். இதையடுத்து தற்போது லியோ படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றது.
Thalapathy 68: வெங்கட் பிரபுவின் ஐடியா..வேண்டாம் என்ற தளபதி..காரணம் இதுதானாம்..!
இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் அனைவரிடமும் கலகலவன பேசி நேரத்தை செலவழித்து வருகிறாராம். ஷாட் முடிந்த பிறகு படப்பிடிப்பு தளத்திலேயே அனைவரிடமும் உட்கார்ந்து அரட்டை அடித்து வருகிறாராம் தளபதி.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த கபாலி
முன்பெல்லாம் தனது ஷாட் முடிந்தால் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்துவிடும் தளபதி தற்போது அனைவரிடமும் ஜாலியாக உரையாடி வருகின்றார். இதனை அவர் தெறி படப்பிடிப்பு தளத்திலிருந்தே பின்தொடர்ந்து வருகின்றார். அதன் பிறகு வெளியான படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செம ஜாலியான மனிதராக இருந்து வருகின்றார்.
அது போல தான் பைரவா படத்தின் பாடல் ஒளிப்பதிவின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். பைரவா படத்திற்கு இசையமைப்பாளராக இருந்த சந்தோஷ் நாராயணன் தான் ரஜினியின் கபாலி படத்திற்கும் இசையமைத்தார்.
நடனமாடிய விஜய்
அப்போது விஜய் ஒருமுறை கபாலி படத்தின் ஓப்பனிங் பாடல் நன்றாக வந்துள்ளதாக அட்லீ சொன்னாரே என கூறினார். அதற்கு சந்தோஷ் நாராயணன், நான் பாடலை அட்லீக்கு காட்டவே இல்லையே என சொன்னாராம். அதற்கு விஜய், அட்லீக்கு காட்டவில்லை என்றால் என்ன, எனக்கு காட்டுங்கள் என கூறிய பிறகு சந்தோஷ் நாராயணன் அப்பாடலை போட்டுக்காண்பித்துள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதனை கேட்டுவிட்டு விஜய் நடனமாடி ரசித்து, பாடல் செமையாக இருக்கு என சந்தோஷ் நாராயணனை வெகுவாக பாராட்டினாராம். இந்த தகவல் சந்தோஷ் நாராயணன் ஒரு பேட்டியில் சமீபத்தில் க்ரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.