பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி அனைவருக்கும் தெரிந்த ஒருவர். இவரின் மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘அழகிய கண்ணே’ என்ற படத்தின் மூலம் திண்டுக்கல் லியோனியின் மகன் சிவக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை சீனு ராமசாமியுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர். விஜயகுமார் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கேமியோ ரோலில் ‘அழகிய கண்ணே’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் லியோனி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tamanna: தமன்னாவால் அப்செட்டில் ‘ஜெயிலர்’ படக்குழு: செம்ம ஷாக்கில் ரசிகர்கள்
இவ்விழாவில் பேசிய லியோ சிவக்குமார், இந்த மேடை எனக்கு கனவு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு மிகப்பெரிய கனவு. இதற்கு எனக்கு சுதந்திரம் அளித்த என் தந்தைக்கு இப்படத்தை சமர்ப்பிக்கிறேன். என் பயணம் சினிமாவை சுற்றி தான் இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த இயக்குனர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி. இந்தப்படத்தின் கதாநாயகி தேர்வு தான் கடினமாக இருந்தது. கடைசியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்பு கொண்டார் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஐ லியோனி பேசும் போது, கே.எஸ். ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். என் குடும்பத்தின் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விஜய் சேதுபதிக்கும் எனது மிகப்பெரிய நன்றி. நான் கேட்ட உடனே சரியென்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்தார். என் மகன் என்பதால் சொல்லவில்லை. சிரமப்பட்டு தான் இந்தப்படத்தில் நடித்தான். அவன் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இவ்வாறு இவ்விழாவில் பேசியுள்ளார் லியோனி.
ஆதரவற்ற நிலையில் இறந்த தனுஷ் பட நடிகர்: இறுதி சடங்குகளை செய்த டி. இமான்.!