ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Surya Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் மகன் ஹீரோவா நடிப்பது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அவர் ஏற்கனவே ஒரு வெப்தொரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிதுணை நடிகராக கோலிவுட்டுக்கு வந்தவர் விஜய் சேதுபதி. மெல்ல மெல்ல வளர்ந்து ஹீரோவானார். அத்துடன் நின்று கொள்ளாமல் வில்லனாகவும் நடிக்கிறார். தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மோஸ்ட் வாண்டட் வில்லனாக நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்கிற மகனும், ஸ்ரீஜா என்கிற மகளும் இருக்கிறார்கள்.சித்தார்த்சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்சூர்யாவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த நானும் ரௌடி தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சூர்யா. இதையடுத்து விஜய் சேதுபதியின் முகில் படம் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டுக்கு வந்தார் ஸ்ரீஜா. இந்நிலையில் அப்பா வழியில் ஹீரோவாக நடிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் சூர்யா. தம்பி, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய், அப்பா இருக்கிறேன் என்று மகனிடம் சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி.
விடுதலை 2வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்து வரும் விடுதலை 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மேலும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தயாரித்து வரும் நடு சென்டர் வெப்தொடரில் ஹீரோக்களில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா விஜய் சேதுபதி. இதற்கிடையே பெரிய திரையில் ஹீரோவாக நடிக்க களரி, தற்காப்பு கலை கற்று வருகிறாரம். மேலும் டான்ஸ் கிளாஸுக்கும் சென்று கொண்டிருக்கிறாராம் சூர்யா.
விஜய் மகன்கோலிவுட்டில் ஏற்கனவே ஒரு சூர்யா இருப்பதால் விஜய் சேதுபதி மகனின் பெயரை படங்களுக்காக மாற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உப்பேனா ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு நடிப்பில் இல்லை படத்தை இயக்குவதில் தான் ஆர்வம் இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் ஹீரோவாகப் போகிறார்.
Vijay: என்னா உயரம், என்னா லுக்கு, ஜம்முனு ஹீரோ மாதிரி இருக்காரே விஜய் மகன்: வைரல் போட்டோ
வாரிசுபிரபலங்களின் வாரிசாக இருப்பதால் தமிழ் திரையுலகில் அறிமுகமாவது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் திறமை இருந்து மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே கோலிவுட்டில் நிலைத்து நிற்க முடியும். ஒரு பிரபலத்தின் வாரிசு என்கிற ஒரே காரணத்திற்காக நிலைத்து நிற்க முடியாது. இது விஜய் சேதுபதிக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் மகன் சூர்யா ஹீரோவாகும் முன்பு அவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
படங்கள்கெரியரை பொறுத்தவரை முந்தைய ஆண்டை போன்றே இந்த ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் பாலிவுட் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார். அந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உலக நாயகன் நடிக்கும் கே.ஹெச். 233 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது. படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். அவரால் எப்படி இப்படி ஓய்வில்லாமல் நடிக்க முடிகிறது என்றே அனைவரும் வியக்கிறார்கள்.
Kamal Haasan: வில்லனா நடிக்கிறேன், ஆனால் 150 கோடி வேணும்: பிரபாஸின் ப்ராஜெக்ட் கே தயாரிப்பாளரிடம் கேட்ட கமல்?