Whatsapp அதிரடி!! வாய்ஸ் மெசேஜ விடுங்க.. இனி வீடியோ மெசேஜ் அனுப்பலாம்!!

வாட்ஸ்அப் புதுப்பிப்பு: மெட்டாவின் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் சமீபத்திய பீட்டா பதிப்பில் வீடியோ செய்திகளை (வீடியோ மெசேஜஸ்) ரோல் அவுட் செய்தது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு நிறுவனம் வழங்கியுள்ள முக்கியமான அம்சமாகும் இது. 

முதலில் வாட்ஸ்அப்பில் தட்டச்சு, அதாவது டைப் செய்து மெசேஜ் அனுப்பும் வசதிதான் இருந்தது. அதன் பின்னர் வாய்ஸ் மெசேஜுக்கான வசதி அளிக்கப்பட்டது. முதலில், ஒரு பயனரால் மெசேஜை டைப் செய்ய முடியவில்லை என்றாலோ, அல்லது அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, அவர் தான் பகிர விரும்பும் செய்தியை வாய்ஸ் மெசேஜ் மூலம் பேசி ஆடியோ மெசேஜ்களை எளிதாக அனுப்பலாம்.

வீடியோ மெசேஜ்

இப்போது இந்த ஆடியோ மெசேஜ் அம்சம் மேலும் மேம்பட்டுள்ளது. ஏனெனில் இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் தொடர்புகளால் மெசேஜ்களை பார்க்கவும் கேட்கவும் முடியும். ஏற்கனவே iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்பட்ட வாட்ஸ்அப்பின் சமீபத்திய அப்டேட்டுடன் இந்த அம்சம் வருகிறது.

இந்த செயலியானது விரைவான வேகத்தில் புதிய அம்சங்களை வெளியிடுவதால் வாட்ஸ்அப் அப்டேட்கள் அதிக நேரம் எடுக்காது. ஏனெனில், எடிட் பட்டன், ஆன்லைன் இருப்பை மறைத்தல், குறிப்பிட்ட நபர்களிடமிருந்து ப்ரொஃபைல் புகைப்படத்தை மறைத்தல், சேட் லாக், பல தொலைபேசி ஆதரவு (மல்டி ஃபோன் சப்போர்ட்) போன்ற பல சோதனை அம்சங்களை இதற்கு முன்னர் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. எனவே, வாட்ஸ்அப்பின் நிலையான பதிப்பைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் புதிய புதுப்பிப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது, ​​iOS -க்கான வாட்ஸ்அப் பீட்டாவின் பதிப்பு 23.12.0.71 மற்றும் Android -க்கான பதிப்பு 2.23.13.4 இல் வீடியோ செய்தியிடல் அம்சம் கிடைக்கிறது. இந்த சமீபத்திய பதிப்புகள் மூலம், பயனர்கள் எளிதாக வீடியோ செய்திகளை அனுப்பலாம் மற்றும் வீடியோ செய்திகளை நேரடியாக வாட்ஸ்அப் சேட்டில் பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வீடியோ செய்திகளை (Video Messages) அனுப்புவது எப்படி

இந்த வசதியின் செயல்முறை மிகவும் எளிமையானது. மேலும் இந்த ப்ளாட்ஃபார்மில் இதை கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த அம்சம் மற்ற ஆப்களில் ஆடியோ செய்தி அனுப்புவதைப் போலவே செயல்படுகிறது. ஒவ்வொரு சேட் பாக்சிலும், பயனர்களுக்கு ஆடியோ செய்திக்கு பதிலாக வீடியோ செய்தியை அனுப்ப மைக்ரோஃபோன் ஐகானுக்குப் பதிலாக வீடியோ ஐகான் காணப்படும். இந்த ஐகான் தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுநர்களுக்கு ஆடியோ அல்லது வீடியோ செய்திகளை அனுப்ப உங்களை அனுமதிக்கும். இதன் மூலம் நீங்கள் எளிதாக வீடியோ செய்திகளை அனுப்பலாம். இதன் மூலம் உங்கள் சேட்கள் இன்னும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் மாறும். 

ஸ்டெப் 1: உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் வீடியோ செய்தியை அனுப்ப விரும்பும் நபருடைய சேட் பாக்சுக்கு செல்லவும்.

ஸ்டெப் 2: நீங்கள் தட்டச்சு செய்ய பயன்படுத்தும் டெக்ஸ்ட் பாக்சின் வலதுபுறத்தில் உள்ள மைக்ரோஃபோன் ஐகான் அல்லது வீடியோ கேமரா ஐகானை டேப் செய்யவும். டைபிங் பாக்சிற்கு சற்று மேலே இந்த ஐகான் அமைந்திருப்பதால், பயனர்கள் அதை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஸ்டெப் 3: மைக்ரோஃபோன் ஐகான் அல்லது வீடியோ கேமரா ஐகானை நீங்கள் டேப் செய்யும்போது, ​​உங்கள் முன் ஒரு வீடியோ பதிவு இடைமுகம் (வீடியோ ரெகார்டிங் இண்டர்ஃபேஸ்) திறக்கும். நீங்கள் இங்கிருந்து வீடியோவைப் பதிவுசெய்யத் தொடங்கலாம்.

ஸ்டெப் 4: வீடியோவைப் பதிவுசெய்து முடித்ததும், “அனுப்பு” (“செண்ட்”) பொத்தானை டேப் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு வீடியோ செய்தியை அனுப்ப வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.