வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியுன் சகோதரர் உட்பட அவரது குடும்பத்தினர் 3 பேர் இதுவரை ஆஜராகவில்லை என சவுக்கு ஷங்கர் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் அவர்களின் அலுவலகங்கள் என 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதிகாரிகளுடன் மோதல்இதேபோல், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்போது அங்கு திரண்ட திமுகவினர் அதிகாரிகளை ற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.புகார்செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகளி சோதனை நடத்த முடியாமல் திரும்பி சென்றனர். சோதனை நடத்த சென்ற தங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அமலாக்கத்துறைசெந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களை தாக்கியதாக புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அவரின் சகோதரர் அசோக்குமார் வீடு என எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் உதவியுடன் சோதனை நடைபெற்றது.சவுக்கு ஷங்கர்
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி அவரை கைது செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து டார்கெட் செய்து வரும் சவுக்கு ஷங்கர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பிரேக்கிங் போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார்.
சம்மன் அனுப்பியும்..
அதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அசோக்கின் மனைவி நிர்மலா, அசோக்கின் மாமியார் லட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் அந்த மூன்று பேரும் வருமான வரித்துறை முன்பு ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் யாரும் ஆஜராகவில்லை என தெரிவித்துள்ளார் சவுக்கு ஷங்கர்.
சிக்கினால் உளறிடுவார்மேலும் அசோக் ஏன் தலைமறைவாகியுள்ளார் என்பது குறித்தும் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். அதாவது செந்தில் பாலாஜிதான், தனது சகோதரர் அசோக்கை கைதில் இருந்து தப்பிக்க வைக்க அவரை தலைமறைவாக்கியுள்ளார் என்றும், அதற்கு காரணம் செந்தில் பாலாஜிக்கு ஏதாவதானால் அசோக் அப்ரூவர் ஆகிவிடுவார், ஸ்டாலின் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட பணம் குறித்த ரகசியங்களை அம்பலப்படுத்தி விடுவார். அதுதான் ஸ்டாலினின் பதற்றத்திற்கும் காரணம் என பதிவிட்டுள்ளார்.