தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூன் 16ஆம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட முன்னணி தனியா நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாமில் ஏராளமான தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களுடைய 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும் மற்றும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.