தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக திகழ்பவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது ‘பொம்மை’ படம் ரிலீசாகியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார் இவர். தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் இவரது கைவசம் அரை படங்கள் உள்ளன. இவரது நடிப்பில் இன்று ‘பொம்மை’ படம் ரிலீசாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர். ‘மான்ஸ்டர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள ‘பொம்மை’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Leo: ரெடியான்னு கேட்ட லோகேஷ் கனகராஜ்.. பின்னாடியே வெளியான மரண மாஸ் அப்டேட்..!
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், ‘பொம்மை’ படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர்களின் படங்களில் கதையே கேட்காமல் கூட நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.
மேலும், தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள வெற்றிமாறன் இயக்கத்திலும் கதையே கேட்காமல் நடிக தயார் என கூறியுள்ளார். அவர் மிகசிறந்த இயக்குனர் என்றும் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கைவசம் இந்தியன் 2, டிமான்டி காலனி 2, ஜீப்ரா, அரண்மனை 4, ஹரி விஷோல் ஆகியோர் இணையும் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Maamannan Trailer: ஊருக்குள்ள வந்தா கொன்னுடுவீங்களா.. மாமன்னனாக மிரட்டும் வடிவேலு.!