காலி வீதி, ஹொரண கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதியை இணைக்கும் வகையில் புதிய லங்கம பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் மொரட்டுவ மற்றும் இரத்மலானை டிப்போக்களிலிருந்து காலி வீதி, ஹொரண கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதிகளை இணைக்கும் வகையில், கொழும்புக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் வசதிக்காக இரத்மலானை புகையிரத நிலையத்தில் இருந்து மஹரகம மற்றும் கல்கிஸ்ஸ, பொருபன, வேரஹெர, கொட்டாவ ஆகிய பகுதிகளுக்கு புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கும், வெளியேறுவதற்கும் நாளாந்தம் அதிகளவான பயணிகள் பயன்படுத்தும் இந்த வீதிகளுக்கான புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் பெருந்தொகையான மக்களின் போக்குவரத்து பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
முன்னாள் அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமான காமினி லொகுகே, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வரனஹங்ச வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.