சூப்பர் சிங்கர் மேடையில் கோபமடைந்த கங்கை அமரன்
சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார எபிசோடில் கங்கை அமரனும் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். அந்த எபிசோடில், போட்டியாளரை அழைக்க பாடல் போடும் போது கங்கை அமரன் இசையமைத்த 'வந்தனம் என் வந்தனம்' என்ற பாடல் இசைக்கப்படுகிறது. இதை மாகாபாவும் குரேஷியும் வந்தனம் சைதாபேட்டை நந்தனம் என மாறி மாறி கலாய்க்க, கோபமடைந்த கங்கை அமரன் எனக்கு இது சரிபட்டு வராது என்று கூறி ஆத்திரத்துடன் மேடையை விட்டு எழுகிறார். இந்த வீடியோவானது தற்போது புரோமோவாக ரிலீஸாகியுள்ளது. இதைபார்க்கும் பலரும் கங்கை அமரன் போன்ற லெஜண்ட்டுகளையும் டிஆர்பிக்காக அசிங்கப்படுத்துவதா? என விஜய் டிவியை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் இது பிராங்க்காக கூட இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகின்றனர்.