புதுடெல்லி,
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்எம்எம்எல்), பிரதம மந்திரி அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் என்பதன் பெயர் மோடி. கடந்த 59 ஆண்டுகளாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் சர்வதேச அறிவு சார் அடையாளமாக இருந்துள்ளது. இனி அது பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். இந்திய தேசிய அரசின் அரசியல் சிற்பியின் பெயர் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க, மறைக்க மோடி எதையும் செய்வார். பாதுகாப்பின்மை எண்ணம் காரமாக சிறுமையைச் சுமந்து திரியும் சிறிய மனிதர்” என்றார்.