முன்னாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற அபிவிருத்தி தொடர்பான சர்வதேச நிபுணருமான கெவின் டிவொக்ஸ், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்றையதினம் (14) பாராளுமன்றத்தில் சந்தித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கொள்கை நிபுணரும், ஆட்சிமுறை தொடர்பான தலைவருமான சந்திரிகா கருணாரத்ன, சபாநாயகரின் வெளிவிவகார ஒருங்கிணைப்புச் செயலாளர் வைத்தியகலாநிதி சமீர யாப்பா அபேவர்தன ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.