கான்பூர்: அன்பாக கணவன் கூப்பிட்டதுமே, ஆசை ஆசையாக அருகில் சென்றார் மனைவி.. அப்பறம் நடந்தது என்ன தெரியுமா? போலீசாருக்கு, இது சம்பந்தமான வியப்பு இன்னமும் வியப்பு நீங்கவில்லை..!!
உத்தரபிரதேசம் மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அனேக் பால்.. இவரது மனைவி சுமன் பால். இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் என 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.
தகராறு: இந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை வருவாம்.. தினமும் தகராறுகள் வீட்டுக்குள் வந்துபோவது சகஜமாக இருந்திருக்கிறது.. எப்போதெல்லாம் முட்டிக்கொள்கிறோர்களோ, அப்போதெல்லாம் ஒருவரையொருவர் அசிங்க அசிங்கமாக திட்டிக் கொள்வார்களாம்.. 2 நாளைக்கு பேசிக்கொள்ளவே மாட்டாங்களாம்.. அப்பறம் ராசியாகிவிடுவாங்களாம்.. மறுபடியும் தகராறு வருமாம்… இப்படியே வாழ்க்கை ஓடியிருக்கிறது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக நிலைமையே மோசமாகிவிட்டது.. அனேக் – சுமன் தம்பதி இடையே வழக்கம்போல் சண்டை வந்துள்ளது.. இந்த முறை கணவன் அனேக், அளவுக்கு அதிகமாக ஆவேசமாகிவிட்டார்.. அதனால், சண்டை போட்ட கையுடன், துப்பாக்கியை கொண்டுவந்து, மனைவி சுமனை தாறுமாறாக சுட்டுவிட்டார்.. இதில், சுட்டுக்கொன்றதில் மனைவி அங்கேயே சுருண்டு இறந்துவிட்டார்.. பிறகு, அனேக்கும் குண்டு பாய்ந்ததில் இறந்துவிட்டார்..
2 உயிர்கள்: அதாவது, ஒரு குண்டு, 2 உயிர்களை பறித்திருக்கிறது… தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. சடலங்களை பார்த்ததுமே, போலீசார் குழம்பி விட்டனர்.. யார் யாரை முதலில் சுட்டது? எப்படி 2 உயிர்கள் பறிபோயின? என்ற ஆச்சரியங்கள் அதிகரித்தன.. பலவாறாக விசாரணை மேற்கொண்டதில், விஷயம் விளங்கயிது..
இதுகுறித்து, அளவுக்கு அதிகமான வியப்புடன், மொராதாபாத் ரூரல் எஸ்பி சந்தீப் குமார் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
அனேக் பூஜை: “அனேக் நிறைய சாமி கும்பிடுவார்.. அமானுஷ்யங்கள் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை உடையவர்.. இதன்காரணமாகவே, அடிக்கடி அமானுஷ்ய பூஜைகளையும் செய்து கொண்டே இருப்பார்.. தம்பதியர் இடையிலான தகராறுகளுக்கு, முக்கியமான காரணமே இந்த வினோத பூஜைகள்தான்.. வழக்கம்போல் ஒருவாரத்துக்கு முன்பும் இவர்கள் சண்டை போட்டுள்ளனர்.. ஒரு வாரமாகேவே இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு சண்டை வந்தால், ஒருவாரம் மனைவியுடன் பேசாமல் இருந்தது கிடையாதாம்.. இதுதான் முதல்முறை.. ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் சண்டையால், அனேக் அப்செட்டாக இருந்திருக்கிறார்.. அதற்கு பிறகு, ஒரு முடிவோடு வழக்கமான பூஜையில் உட்கார்ந்துள்ளார்.. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அந்த பூஜையை செய்துள்ளார்..
ஆச்சரியம்: பூஜை முடிந்ததுமே, வெளியே எழுந்துவந்தார்.. மனைவியை மென்மையாக அழைத்திருக்கிறார்.. ஒருவாரம் கழித்து, தன்னை பெயர் சொல்லி கணவன் கூப்பிட்டதுடன், ஆசையாகவும், அன்பாகவும் பெயரை சொன்னதால், மனைவிக்கே ஆச்சரியமாக இருந்திருக்கிறது.. கணவரின் முகமும் சாந்தமாக மாறியிருந்ததை கவனித்துள்ளார்.. அதனாலி, கணவனின் குரலுக்கு கட்டுப்பட்டு அவர் அருகே சென்றுள்ளார்.. அப்போது மனைவியை, அனேக் இறுக்கமாக கட்டிப்பிடித்திருக்கிறார்.
மனைவியை ஒருகையால் அணைத்துக்கொண்டே, இன்னொரு கையால், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்.. அதை சுமன் முதுகில் வைத்து ட்ரிக்கரை வேகமாக அழுத்தியிருக்கிறார்.. அது ஒரு நாட்டுத்துப்பாக்கி.
பயங்கர சத்தம்: பயங்கர சத்தத்துடன் புல்லட் சீறிக்கொண்டு வெளியேவந்து, மனைவி சுமனின் முதுகை துளைத்தது.. அப்படியே நேராக பாய்ந்துவந்து, மனைவியை கட்டிப்பிடித்து கொண்டிருந்த, அனேக்கின் நெஞ்சுக்குள்ளேயும் துளைத்தது… இருவருமே ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டனர்.. இவர்களின் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்துள்ளனர்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.. ஆனால் 2 பேருமே இறந்துவிட்டனர்..
தம்பதிக்குள் நடந்த பிரச்சினைக்கும், அனேக் விபரீத முடிவை எடுத்ததற்கும் பின்னணியில் அவர் மேற்கொண்ட மர்ம பூஜை வழக்கங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன” என்று போலீசார் அதிர்ச்சி விலகாமல் தெரிவித்துள்ளனர்.
எனினும், மனைவியை கொல்லும் முயற்சியில் தவறுதலாக குண்டு பாய்ந்து கணவர் இறந்தாரா அல்லது, திட்டமிட்டு கொலையா? தற்கொலையா? இரண்டையும் ஒரே புல்லட்டில் சாதித்தாரா? என்பது உட்பட பல்வேறு கேள்விகளுடன் போலீஸார் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது..
அமானுஷ்யம்: சம்பவ இடத்தில், அனேக் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.. இந்த துப்பாக்கி அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை.. லைசென்ஸ் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அதையும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அவர் நடத்தி வந்த அமானுஷ்ய பூஜைகள் குறித்தும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
இந்த சம்பவம் பரபரப்பையும், அளவுக்கு அதிகமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. “புரிதலற்ற” 2 இதயங்களையும் ஒரே ஒரு தோட்டா துளைத்தெடுத்து விட்டது..!!