
மார்கழி திங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் முதல் முறையாக இயக்கும் திரைப்படம் மார்கழி திங்கள். இதில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுமுக நடிகர் ஷாம் செல்வன், நக்ஷா சரண் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா பிக்சர்ஸ் மூலம் தயாரித்து இப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.