சென்னை : நடிகை அனேகா சுரேந்திரன் மாலத்தீவில் தனது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
நடிகை அனேகா சுரேந்திரன் நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்திலும், விஸ்வசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.
அவர் ஒரு சாயலில் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பதால் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக: நடிகை அனேகா சுரேந்திரன் 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தில் பாஸ்கோ மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனேகா. அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு காத தொண்டரனும் என்ற மலையாள திரைப்படத்தில் லயா என்ற கதாபாத்திரத்திலும், அதன் பின்பு 4 பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் நடித்திருந்தார்.
அஜித்தின் ரீல் மகள்: இதே போல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முதல் முதலாக தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஈஷா என்ற ரோலில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு அதே ஆண்டு பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக மலையாளத்தில் சிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கதாநாயகியாக: தொடர்ச்சியாக தமிழில் படங்களில் குட்டி பெண்ணாக நடித்து வந்த அனேகா, ஓ மை டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் முத்தக்காட்சியிலும் தாராளம் காட்டி இருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
மாலத்தீவில் நண்பர்களுடன்: இந்நிலையில், தன்னுடைய நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அனேகா, நைட் பார்ட்டி ஒன்றில் டூ பீஸ் உடையில் குதுகலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் பரவி வரும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி நயன்தாரா வளர்ந்துவிட்டார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.