வாஷிங்டன்: தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கோ தீவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர்.
டோங்கோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் டோங்கோ தீவு குலுங்கியது. ஓசேனியா நாட்டில் உள்ள அமைந்துள்ள டோங்கோவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் டோங்காவிற்கு தென்மேற்கே 280 கிமீ (174 மைல்) தொலைவில் 167.4 கிமீ (104 மைல்) ஆழத்தில் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் 7.2 என்ற அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டதால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதால் அமெரிக்கா, மேற்கு கடலோரம், பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளை சுனாமி அலைகள் எதுவும் தாக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. எனினும், சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை எனக்கூறி சுனாமி எச்சரிக்கை எதையும் அமெரிக்க வானிலை ஆய்வு மையம் விடுக்கவில்லை.