டாக்கா வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது அசாம் மாநிலத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10.15 மணிக்கு வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. மக்கள் நிலநடுக்கத்தால் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
