விமானத்தின் மீது மோதி இறந்த பறவை.. விமானிகளின் முகங்களில் தெறித்த ரத்தம்.. நடுவானில் பரபரப்பு..!

ஈக்வடாரில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியதில் காக்பிட் கண்ணாடி உடைந்து, விமானிகளின் முகங்களில் ரத்தம் தெறித்தது.

லாஸ் ரியாஸ் மாகாணத்தில் நேரிட்ட இந்த சம்பவத்தின்போது, கண்ணாடியில் மோதி இறந்த பறவையின் உடல் அந்தரத்தில் தொங்கியபடி விமானம் பறந்தது.

கண்ணாடி உடைந்து காக்பிட்டுக்குள் பலத்த காற்று வீசிய போதும், பறவையின் ரத்தம் தெறித்து இருந்த நிலையிலும் விமானிகள் பதற்றமடைவில்லை. அவர்கள் அருகில் இருந்த விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கினர்.

விமானத்தில் மோதிய பறவை பிணந்தின்னிக் கழுகு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.